131 இடங்களில் அதிமுக முன்னிலை- புதுயுகம் தொலைக்காட்சி சர்வே முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தலை குறித்த சர்வே முடிவுகளும் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. அந்த வகையில் புதுயுகம் தொலைக்காட்சி நடத்திய சர்வே முடிவில் எந்த கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பது குறித்த முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி புதுயுகம் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 44% வாக்குகளை பெற்று 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதுயுகம் தொலைக்காட்சி சர்வே முடிவு வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 234 தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர் என்ற அடிப்படையில் 2,900 வாக்குச்சாவடிகளின் வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அந்த முடிவுகளில் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 46.5% வாக்குகளைப் பெறும் என்றும் திமுக 38.5% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தில் அதிமுக கூட்டணி 39% வாக்குகளை பெற்று பின்னடவை சந்திக்கும் என்றும் திமுக கூட்டணி 45 வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்டா மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 44% வாக்குகளும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 45% வாக்குகளை பெறும் என்றும் திமுக கூட்டணி 41% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு காரணங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று கூறப்பட்ட தெற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 42.8% வாக்குகளும் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மாநில அளவில் அதிமுக கூட்டணி 44% வாக்குகளை பெறும் என்றும் புதுயுகம் டிவி நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்து இருக்கிறது. அதேசமயம் திமுக கூட்டணிக்கு 42% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 53% மக்கள் தெரிவித்து உள்ளனர். இது அதிமுக அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்து உள்ளதோடு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
இறுதியாக தொகுதி அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி 102 இடங்களிலும் மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெறும் என்று புதுயுகம் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்து உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout