என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்தனர்: கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டு!
- IndiaGlitz, [Sunday,January 17 2021]
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இதுவரை ஐந்து கட்ட பிரச்சாரங்களை முடித்துள்ள அவர் இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் முடிக்க உள்ளதால் நாளை முதல் சூறாவளிப் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மக்கள் திலகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் அவர்கள் சென்னையில் எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனை அடுத்து அவர் இன்று எம்ஜிஆர் குறித்த ‘காலத்தை வென்றவன்’ என்ற ஆவணப்படத்தையும் வெளியிட்டு பேசும்போது ’விஸ்வரூபம்’ படத்தின் பிரச்சனையின்போது அதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது என்றும் எம்ஜிஆர் இருந்திருந்தால் இந்த நிலை தனக்கு ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார். அதிமுக மீது திடீரென அவர் பகீர் குற்றச்ச குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ’எம்ஜிஆரின் மீட்சி தான் நான் என்றும், விதை நான் போட்டது என்பது சிவாஜி வசனம் மட்டுமல்ல அது எம்ஜிஆருக்கும் ஆனது தான் என்றும் கூறினார். மேலும் இங்கு இருக்கும் அனைவருமே தமிழ் பேசும் திராவிடர்கள் தான் என்றும் பட்டா போட்டு பழகியதால் எம்ஜிஆர் எங்களுக்கு மட்டும் சொந்தம் என்று சிலர் கூறுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலத்தை வென்றவன் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு கமல்ஹாசன் பேசிய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.