அதிமுக பொதுக்குழு கூடும் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 28 2017]

சமீபத்தில் அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் பரபரப்பாக உள்ளது. தினகரன் அணியினர் எந்த நேரமும் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற நிலையில், சசிகலாவை கட்சியில் இருந்தும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்க விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் பொதுக்குழு கூடும் தேதி, நேரம், இடம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேல\ஸ் மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு கூடவுள்ளதாகவும், இந்த பொதுக்குழுவிற்கு அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினரகள் தவறாது அழைப்பிதழுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அஜித்தின் விவேகம்: 4 நாட்கள் தமிழக மற்றும் உலக வசூல் நிலவரம்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்ற போதிலும் சென்னையில் நான்கு நாட்களில் சாதனை வசூல் செய்தது என்பதை காலையில் பார்த்தோம்.

மீண்டும் களத்தில் குதித்த ஓவியா: ரசிகரகள் மகிழ்ச்சி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்த்தி மற்றும் ஜூலி மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஓவியா மீண்டும் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை தட்டிவிட்டுள்ளார்.

கிளிசரின் போடாமல் நடிகையை அழ வைத்த இயக்குனர்

சமீபத்தில் வெளியான ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படம் பரவலாக பாராட்டப்பட்டிருப்பதோடு வசூல் ரீதிலும் வெற்றிபெற்றுள்ளது.

ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் தண்டனை அறிவிப்பு

ஆன்மீக அமைப்பு ஒன்றின் தலைவரான ராம் ரஹிம் சிங் என்பவர் தன்னுடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

வந்தவுடன் வேலையை ஆரம்பித்த ஜூலி!

என்ன தான் செய்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போலவே சிலரை மாற்றவே முடியாது என்று பெரியோர்கள் கூறுவதுண்டு