11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவுக்கு பொதுக்குழு ஒப்புதல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து இதுவரை தமிழக அரசு செய்த நலத் திட்டங்கள் குறித்தும் சாதனைகள் குறித்தும் பேசி வருகிறார்.
இந்நிலையில் நேற்று சென்னை வானகரம் பகுதியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியின் சிறப்பான திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல் அதிமுகவை தொடர்ந்து மோசமாக விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சியை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்கலாம் என்பது குறித்த முடிவுகளை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுக்கலாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அடுத்ததாக முதல்வர் பழனிசாமியை ஒருமனதாக முதல்வர் வேட்பாளராக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்.காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.சிடி. பிரபாகர், முன்னாள் எம்.பி பி.எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout