அதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. பாமக வுடனான தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் தேமுதிக, பாஜக போன்ற கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் அதிமுக கட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 234 தொகுதிகளுக்குமான விருப்பமனு குறித்த நேர்காணலில் ஈடுபட்ட அக்கட்சி தற்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதன்படி 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் போட்டி இடுகிறார். எடப்பாடி தொகுதியில்அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிடுகிறார். தற்போது தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 ஆவது முறையாக சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டி இட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி. சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் 3 ஆவது முறையாக தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டி இருக்கிறார். அதோடு சென்னை மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் 7 ஆவது முறையாகப் போட்டியிட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து அதிமுக அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று உள்ளது என்பதையும் மறைமுகமாக தெரிவித்து உள்ளது.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) March 5, 2021
சட்டமன்ற பேரவை பொது தேர்தல் - 2021
கழக வேட்பாளர்கள் முதல் பட்டியல். pic.twitter.com/l73K5aoEqF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments