இணைந்தது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள். பாஜக உற்சாகம்
- IndiaGlitz, [Thursday,June 22 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த இரு அணிகளும் கட்சி ரீதியில் இன்னும் இணையவில்லை என்றாலும் பாஜகவின் குடியரசுதலைவர் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதில் ஒரே முடிவை எடுத்துள்ளது.
நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு, ஆதரவு அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியும் அறிவித்துள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளதால் அவருடைய வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே பாஜக உற்சாகம் அடைந்துள்ளதாக தெரிகிறது.