அதிமுக தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பல அம்சங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அதிமுக தலைமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிக்கையில் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பல அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாக அதிமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு லட்சம் வரை கடன் தள்ளுபடி, விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும், நெசவாளர் நல வாரியம், மழைக்கால நிவாரணம் 5,000 ரூபாய் வழங்கப்படும் ஆகியவை நெசவாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கை 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் நெசவாளர்களுக்கு என்றும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக அதிமுக சார்பில் கூறப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு அவர்கள் பெற்ற கடன் தொகையில் 1 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் நெசவாளர் நல வாரியம் அமைக்கப்படும், விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டுகளாக உயர்த்தி வழங்கப்படும், மழைக்கால நிவாரணம் 5,000 ரூபாய் வழங்கப்படும், கைத்தறி ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், நெசவாளர்களுக்கு ஏற்ற வகையில் நூல் விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் நெசவாளர்களுக்கு சாதகமாக அமையும் என்று அதிமுக சார்பில் கருத்துக் கூறப்படுகிறது.
மேலும் இத்தகைய அறிவிப்புகளைத் தொடர்ந்து சிலர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments