என் வசதிக்கு காரணம் என்னுடைய உழைப்பு தான்...வயல் வெளியில் வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அங்கிருக்கும் வயல்வெளிகளில் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பிரச்சாரம் செய்த போது அவர் கூறியிருப்பதாவது,
"தேர்தல் சமயத்தில் திமுக-வினர் கொச்சையான வார்த்தைகளை கூறி, தாய்மையின் புனிதத்தை அவமானப்படுத்தும் நோக்கில் பேசிவருகின்றனர். அதிமுகவிற்கு ஓட்டுப்போட்டால் தான், உங்களுக்கு தேவையான வசதிகள் வீடு தேடி வரும், திமுகவிற்கு ஓட்டுப்போட்டால் இருக்கும் வீடும் காணாமல் போய்விடும் என்று கூறினார். பின்பு மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்கு உள்ளிருக்கும் அளுந்தூர், கோடங்கிப்பட்டி, குள்ளம்பட்டி உள்ளிட்ட கிராம மக்களிடம் பேசி வாக்குகள் சேகரித்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ள பகுதியில் இருக்கின்ற குளத்தை தூர்வாரி, அதில் நீரை சேமித்து வைக்க வழிவகை செய்வோம். இது இனாம்குளத்தூர் பகுதியில் வாழும் மக்களுக்காகவே செய்யப்படும்.
மேலும் அம்மாபேட்டை பகுதியில் தொழிற்சாலைகள் நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டு, அங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க செய்வோம் என்று கூறினார். இதுபோல் மாத்தூரில் வயல்வெளிகளில் வேலை செய்தவர்களிடமும், இனாம்குளத்தூர் பகுதியில் 100 நாள் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள், முதியோர்களிடமும் அதிமுக அரசு குறித்த நலத்திட்டங்களை கூறி வாக்குகளை சேகரித்தார்.
மேலும் பிரச்சாரம் செய்த அவர், நான் திமுகவினரை போல் கட்டப்பஞ்சாயத்து செய்தோ, மணலை கொள்ளையடித்தோ, வீடுகளை அபகரித்தோ ஆட்சிக்கு வரவில்லை, என் வருவாயையும் பெருக்கவில்லை. நான் வசதியாக இருப்பதற்கு காரணம் என்னுடைய உழைப்பு மட்டும்தான். திமுக எதிர்க்கட்சி வேட்பாளர் நான் தொகுதியில் எந்த நல்லது, கேட்டதற்கும் செல்வதில்லை எனக்கூறுகிறார். அவர் துணைவியார் இறந்தபோது கட்சி பாகுபாடில்லாமல் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தேன் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout