அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா??? துணை முதல்வரின் பரபரப்பு விளக்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணித்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இனிவரும் தேர்தல்களிலும் அதிமுக, பாஜக வுடன் கூட்டணி தொடரும் என்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி கனியை பறிப்போம்” என்றும் மேடையில் பேசினார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அவர் உறுதி செய்துள்ளார்.
முன்னதாகத் தமிழகத்தில் பாஜகவினரில் பல்வேறு செயல்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாகக் கருத்துக் கூறப்பட்டது. இதனால் கூட்டணி உடைய போகிறதா என்றுகூட விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த கூட்டணி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தொடரும் என்பதை ஓ.பன்னீர் செல்வம் தற்போது உறுதி செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com