பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற அதிமுக- அசத்தும் கருத்துக் கணிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளையொட்டி பல தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிமுகவிற்கு சாதகமான கருத்துக் கணிப்பு முடிவினை அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் வெளியிட்டு இருப்பது பெரிதும் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் அதிமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாக்குகளை அதிகமாகப் பெறும் என்றும் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்து அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்றும் அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் பல்வேறு கேள்விகள் முன்னிறுத்தப்பட்டு அவற்றைக் கொண்டே சர்வே முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் அதிகமுவிற்கு 52% விவசாயிகள் ஆதரவும் 51% பெண்கள் ஆதரவும் 36% தொழிலாளர்கள் ஆதரவும் கிடைத்து இருக்கிறது. மேலும் அதிமுக ஆட்சியால் கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என 34% பேரும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக 30% பேரும் வாக்களித்து உள்ளனர்.

மேலும் முதலமைச்சர் பழனிசாமியின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று 28% பேரும் சிறப்பு என்று 39% பேரும் தெரிவித்து உள்ளனர். இது மக்களிடையே முதலமைச்சருக்கு இருக்கும் ஆதரவை காட்டுவதாக அமைந்து இருக்கிறது. மேலும் கூட்டுறவு கடன் தள்ளுபடி மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி மற்றும் நகைக் கடன் தள்ளுபடி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கியது, குடிமராமத்துப் பணிகள் போன்றவை மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்று 54% பேர் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

மேலும் அதிமுகவிற்கு எதிரான அலை இல்லை என்று 41% பேரும் எதிரான அலை இருப்பதாக 22% பேரும் வாக்களித்து இருப்பது அதிமுக நிர்வாகிகளுக்கு பெரிதும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெண் வாக்காளர்களை கவர்ந்த முதல்வராக எடப்பாடி 40% வாக்குகளை பெற்று இருக்கிறார். அதேபோல இளைஞர்களைக் கவர்ந்த முதல்வர் வேட்பாளராக 20% வாக்குகளும் தலித் வாக்காளர்களை கவர்ந்த முதல்வர் வேட்பாளராக 32% வாக்குகளும் பெற்று இருக்கிறார்.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று 32% பேரும் மு.க.ஸ்டாலின் என்று 30% பேரும் வாக்களித்து உள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் அதிமுகவிற்கே சாதகமாக அமைந்து இருக்கிறது. இதனால் அதிமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

ஓட்டு போட்டா கர்ஜிப்பேன், போடலைன்னா சின்னதா குரல் கொடுப்பேன்: தமிழ் நடிகையின் பிரச்சாரம்!

எனக்கு ஓட்டு போட்டால் சட்டமன்றத்தில் உங்களுக்காக கர்ஜிப்பேன் என்றும் ஓட்டு போடவில்லை என்றால் சின்னதாக குரல் கொடுப்பேன் என்றும் தமிழ் நடிகை ஒருவர் மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். 

கணவர் சம்மதித்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்: ரசிகரின் கேள்விக்கு தமிழ் நடிகை பதில்!

பிரபல தமிழ் நடிகை ஒருவரின் கிளாமர் புகைப்படங்களை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு 'எனது கணவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்கிறேன்

விபத்தில் சிக்கிய எஸ்.பி.வேலுமணி கார்...!

பாரத பிரதமர் மோடியின் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கார் விபத்துக்குள்ளானது. 

என் வசதிக்கு காரணம் என்னுடைய உழைப்பு தான்...வயல் வெளியில் வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர்..!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அங்கிருக்கும் வயல்வெளிகளில் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

தனுஷின் 'கர்ணன்' சென்சார் குறித்த தகவல்!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2 முறை தேசிய விருது பெற்ற நடிகர் தனுசுக்கு