பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற அதிமுக- அசத்தும் கருத்துக் கணிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளையொட்டி பல தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிமுகவிற்கு சாதகமான கருத்துக் கணிப்பு முடிவினை அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் வெளியிட்டு இருப்பது பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் அதிமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாக்குகளை அதிகமாகப் பெறும் என்றும் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்து அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்றும் அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் பல்வேறு கேள்விகள் முன்னிறுத்தப்பட்டு அவற்றைக் கொண்டே சர்வே முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் அதிகமுவிற்கு 52% விவசாயிகள் ஆதரவும் 51% பெண்கள் ஆதரவும் 36% தொழிலாளர்கள் ஆதரவும் கிடைத்து இருக்கிறது. மேலும் அதிமுக ஆட்சியால் கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என 34% பேரும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக 30% பேரும் வாக்களித்து உள்ளனர்.
மேலும் முதலமைச்சர் பழனிசாமியின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று 28% பேரும் சிறப்பு என்று 39% பேரும் தெரிவித்து உள்ளனர். இது மக்களிடையே முதலமைச்சருக்கு இருக்கும் ஆதரவை காட்டுவதாக அமைந்து இருக்கிறது. மேலும் கூட்டுறவு கடன் தள்ளுபடி மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி மற்றும் நகைக் கடன் தள்ளுபடி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கியது, குடிமராமத்துப் பணிகள் போன்றவை மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்று 54% பேர் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
மேலும் அதிமுகவிற்கு எதிரான அலை இல்லை என்று 41% பேரும் எதிரான அலை இருப்பதாக 22% பேரும் வாக்களித்து இருப்பது அதிமுக நிர்வாகிகளுக்கு பெரிதும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெண் வாக்காளர்களை கவர்ந்த முதல்வராக எடப்பாடி 40% வாக்குகளை பெற்று இருக்கிறார். அதேபோல இளைஞர்களைக் கவர்ந்த முதல்வர் வேட்பாளராக 20% வாக்குகளும் தலித் வாக்காளர்களை கவர்ந்த முதல்வர் வேட்பாளராக 32% வாக்குகளும் பெற்று இருக்கிறார்.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று 32% பேரும் மு.க.ஸ்டாலின் என்று 30% பேரும் வாக்களித்து உள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் அதிமுகவிற்கே சாதகமாக அமைந்து இருக்கிறது. இதனால் அதிமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout