விஷால் வேட்புமனுவை திடீரென நிறுத்தி வைத்த தேர்தல் அதிகாரி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த முறை அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சை வேட்பாளர்கள் தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதிமுகவில் இருந்து மதுசூதனனும், திமுகவில் இருந்து மருதுகணேஷூம் போட்டியிடும் நிலையில் நேற்று ஒரேநாளில் 101 சுயேட்சை வேட்பாளர்க மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்
இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று தேர்தல் அதிகாரியால் பரிசீலனை செய்யப்பட்டது. விஷாலின் வேட்புமனு பரிசிலீக்கப்பட்டபோது அவரது வேட்புமனுவில் பல குழப்பங்கள் இருப்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விஷாலின் வேட்புமனு பரிசீலிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு அவரது வேட்புமனு பரிசிலீக்கப்படும் என தெரிகிறது.
ஒரு சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்ற விஷயத்தில் அதிமுக-திமுக கூட்டு சேர்ந்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கின்றனர். விஷால் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று கூறியவர்கள் அவரை போட்டியே போடவிடாமல் தடுப்பதில் இருந்தே அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது வெட்ட வெளிச்சமாக புரிய வந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com