விஷால் வேட்புமனுவை திடீரென நிறுத்தி வைத்த தேர்தல் அதிகாரி

  • IndiaGlitz, [Tuesday,December 05 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த முறை அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சை வேட்பாளர்கள் தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதிமுகவில் இருந்து மதுசூதனனும், திமுகவில் இருந்து மருதுகணேஷூம் போட்டியிடும் நிலையில் நேற்று ஒரேநாளில் 101 சுயேட்சை வேட்பாளர்க மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்

இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று தேர்தல் அதிகாரியால் பரிசீலனை செய்யப்பட்டது. விஷாலின் வேட்புமனு பரிசிலீக்கப்பட்டபோது அவரது வேட்புமனுவில் பல குழப்பங்கள் இருப்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விஷாலின் வேட்புமனு பரிசீலிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு அவரது வேட்புமனு பரிசிலீக்கப்படும் என தெரிகிறது.

ஒரு சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்ற விஷயத்தில் அதிமுக-திமுக கூட்டு சேர்ந்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கின்றனர். விஷால் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று கூறியவர்கள் அவரை போட்டியே போடவிடாமல் தடுப்பதில் இருந்தே அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது வெட்ட வெளிச்சமாக புரிய வந்துள்ளது.

More News

தயாரிப்பாளர் சங்க பதவியை திடீரென ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவது சரியில்லை என்றும், அவர் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு தாராளமாக தேர்தலில் போட்டியிடலாம்

ஜெயலலிதா நினைவு தினம்: விஷால் மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தி ஆனதை அடுத்து இன்று காலை முதல் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மாலை, மரியாதை செய்து வருகின்றனர்.

சேரனின் செயல்கள் தொடர்ந்தால் நடவடிக்கை: விஷால்

இயக்குனர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்

ஸ்கூபா விளையாடிய போது விபரீதம்: இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் பலி

அமெரிக்காவில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த இயக்குனராக செயல்பட்டு வந்த 49 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், ஸ்கூபா விளையாடியபோது சுறா மீன் தாக்கியதால் பரிதாபமாக பலியானார்.