'வேட்டையன்' அமிதாப்புக்கு ஏஐ டெக்னாலஜி மூலம் பின்னணி குரலா? யார் பேசியது?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மேலும், இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நகரில் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் காண இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ’வேட்டையன்’ படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், அவருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்துள்ளதாகவும், அந்த குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் அமிதாப்பச்சனின் குரலாக மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ’வேட்டையன்’ படத்தில் மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அமிதாப் பச்சனுக்கு பின்னணி குரல் கொடுக்கவும் அதே ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான செய்தியாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com