ஏஐ- தொழில்நுட்பத்தில் செக்ஸ் ரோபோ? உறவுக்கான அர்த்தத்தையே மாற்ற போகிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மின்சாரத்தால் இயங்கக்கூடிய செக்ஸ் பொம்மை, ரோபோக்கள் குறித்த விஷயங்களை எல்லாம் இதற்கு முன்பு கேட்டிருப்போம். ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய புதிய செக்ஸ் ரோபோக்கள் அன்பு மற்றும் உறவுக்கான வரைமுறைகளில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தப் போகிறது என்று முன்னாள் கூகுள் நிர்வாகி ஒருவர் கூறியிருக்கும் தகவல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவினால் இயங்கக்கூடிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதே செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் புதிய செக்ஸ் ரோபபோக்கள் மனிதர்கள் உயிருடன் இருப்பதைப் போன்றும் படுக்கையில் அவை மனிதத் துணையின் தேவையை பூர்த்தி செய்துவிடும் அளவிற்கு உண்மைத் தன்மையுடன் உருவாகும் என்றும் முன்னாள் கூகுள் நிர்வாகி கருத்துக் கூறியிருக்கிறார்.
கூகுள் நிறுவனத்தின் சார்பாக ரகசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு ஒன்று இயங்கி வருவதாகவும் அதற்கு X எனப் பெயரிட்டு இருப்பதாகவும் முன்னதாகப் பல தகவல்கள் கூறப்பட்டு உள்ளன. தற்போது அதன் முன்னாள் தலைமை வணிக அதிகாரியாக இருந்தவராக “மோ கவ்தட்” என்பவர் பிரபல யூடியூப் போட்காஸ்ட் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
அதாவது ஏஐ போட்களுடன் இணைக்கப்பட்டு உருவாக்கப்படும் ஹெட்செட்கள் செக்ஸ் ரோபோவை உண்மையானது என நினைக்கும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன எனக் கூறியுள்ளார். வெறுமனே செக்ஸ் ரோபோ உயிருடன் இருக்கிறது அல்லது விர்ச்சுவர் ரியாலிட்டியில் பார்க்க வைக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.
இதையெல்லாவற்றையும் தாண்டி தற்போது ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்படும் புதிய செக்ஸ் ரோபோக்கள் மனிதர்களின் உண்மையான உணர்வை அது வெளிப்படுத்துவது போன்றே நமக்கு உருவகப்படுத்திக் காட்டப்படும். இதனால் படுக்கையில் ஒரு உண்மையான ஆணோ பெண்ணோ நம்முடன் இருப்பது போன்ற உருவகத்தை நம்மால் உணரமுடியும். இதனால் அன்பு மற்றும் உறவு நிலைமைகளில் பெரிய மாற்றமே ஏற்பட போகிறது என்று மோ கவ்தட் கூறியுள்ளார்.
இதற்காக ஆப்பிள் விஷன் ப்ரோ, குவெஸ்ட் 3, ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் போன்றவை உருவாக்கப்பட இருக்கிறது. இது போட்களுடன் இணைக்கப்படும்போது உண்மையான மனித உருவத்தைப் போன்று ஏஐ செக்ஸ் ரோபோவை நம்மால் பார்க்கவும் உணரவும் முடியும் என்று அவர் கூறியிருக்கும் தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout