இந்திய மருமகனாக மாறிய எலான் மஸ்க்… AI சேட்டையால் வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப் பிரபலங்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இந்திய மருமகனைப் போன்று உடையணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதெப்படி சாத்தியம் என்று பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
உலகப் பணக்காரர்களில் முதன்மையாக இருந்துவரும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா கார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரபல சமூகவலைத் தளமான டிவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கிய நிலையில் அதன் பல்வேறு அம்சங்களைத் தற்போது மாற்றி வருகிறார். அந்த வகையில் என்.பி.சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த யக்காரினோ என்பவரை தற்போது டிவிட்டரின் புதிய திலைமை நிர்வாகியாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உலகப் பணக்காரர்களுள் ஒருவராக இருந்துவரும் எலான் மஸ்க் ஷெர்வானி அணிந்துகொண்டு இந்திய மாப்பிள்ளை போன்று குதிரையில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. இதெப்படி சாத்தியம்? என்று இணையவாசிகள் பலரும் எழுப்பிய நிலையில் மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரோலிங் கேன்வாஸ் என்பவர் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் எலான் மஸ்க்கை இந்திய மாப்பிள்ளை போன்று உருவாக்கியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் கால்பதித்துவிட்ட நிலையில் எலான் மஸ்க் இந்த தொழில்நுட்பத்தை தானியங்கி போக்குவரத்து வர்த்தக உற்பத்திற்கு பயன்படுத்தும் முடிவிற்கு வந்துள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு ஷெர்வானி அணிவித்து இந்திய மாப்பிள்ளை கோலத்தில் மாற்றியிருக்கும் புகைப்படங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments