மகனுக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு காரா? நிஜ ஹீரோ சோனு சூட் அளித்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் நடிகர் சோனு சூட் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளைத் தேடிப்போய் செய்து வந்தார். இதனால் உணவகம் முதற்கொண்டு சலூன்கடை வரை அவரது பெயரை தற்போது பலரும் சூட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சோனு சூட் 18 வயது நிரம்பிய தனது மூத்த மகனுக்கு தந்தையர் தினத்தை ஒட்டி ரூ.3 கோடி மதிப்புள்ள சொகுசு கார் பரிசளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து நடிகர் சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார். Merceds maybach GIS 600 Merceds maybach GIS 600 வகை கார் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை ஓட்டத்திற்கு எங்கள் வீட்டிற்கு வந்தது. ஆனால் அந்தக் காரை நான் எனது மகனுக்கு பரிசாக அளிக்கவில்லை. மேலும் தந்தையர் தினத்தில் பரிசளிப்பதாக இருந்தால் நான் ஏன் பரிசளிக்க வேண்டும். அவர்கள்தான் எனக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். தந்தையர் தினத்தில் அவர்கள் என்னுடன் இருப்பதே சிறப்பான பரிசு எனத் தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட் அளித்துள்ள இந்த விளக்கம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறது.
கொரோனா நேரத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவர்ளது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். மேலும் படிக்கும் குழந்தைகளுக்கு சொல்போன், மலை கிராமங்களுக்கு செல்போன் டவர், விவசாயிக்கு டிராக்டர் என வழங்கிய சோனு சூட் கொரோனாவின் இரண்டாம் அலை நேரத்தில் பல ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி மக்களும் பெரும் உதவியாக இருந்தார். இதனால் பெரும்பாலான ஏழை மக்கள் தற்போது சோனு சூட்டை தங்களது நிஜ ஹீரோவாகப் பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com