ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ உள்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’.
சதீஷ் நாயகனாக நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சதீஷ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். . செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
சதீஷ் தனது கனவில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நிஜ வாழ்வில் நடப்பதை அடுத்து அதை எப்படி தடுப்பது என்ற முயற்சி எடுக்கும் கதை அம்சம் கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் உள்ளது என்றும் நிச்சயம் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get Ready for a spine-chilling laughter fest! #ConjuringKannappan is releasing in theatres worldwide on December 8th! 👻😄#ConjuringKannappanOnDec8th
— AGS Entertainment (@Ags_production) November 22, 2023
Produced by @Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh
Directed by @selvinrajxavier
A @thisisysr… pic.twitter.com/dwhQ3CLxoQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com