நீ நேர்ல தாண்டா ஒரு மாதிரி இருக்க.. கேமிராவுல சூப்பரா இருக்க.. பிரதீப் ரங்கநாதன் அடுத்த பட அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ளது என்பது தெரிந்தது.
தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ என்ற படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு ’திருட்டுப்பயலே’ என்ற படத்தை முதன் முதலில் தயாரித்தது. அதன் பின் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ ’மதராசப்பட்டினம்’ ’இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ ’யுத்தம் செய்’ ’மாற்றான்’ ’இரும்பு குதிரை’ ’வை ராஜா வை’ ’கவன்’ ’பிகில்’ ’லவ் டுடே’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தது.
இந்த நிலையில் இன்று நிறுவனத்தின் 26 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை 'ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’லவ் டுடே’ திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்த நிலையில் எங்களது அடுத்த படத்திலும் பிரதீப் ரங்கநாதன் இணைகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்ஐசி’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.
#LoveToday broke all records and gave us so much love. The next film has to be as special so we took our time and found the perfect script and the perfect director in @Dir_Ashwath to make the next blockbuster with our own @pradeeponelife as hero. HERE IS OUR NEXT FROM THE HOUSE…
— Archana Kalpathi (@archanakalpathi) April 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com