அஜித் படத்தை தயாரிப்பது உண்மையா? ஏஜிஎஸ் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் திரைப்படங்கள் தயாராவதை விட அதிகமாக தயாராவது வதந்திகள் தான் என்பதும், குறிப்பாக ஒருசில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு இஷ்டத்துக்கு செய்திகளை வெளியிட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் சமீபத்தில் அஜித் படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்த செய்தியை அடுத்து தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பனா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் நாங்கள் இதுவரை எந்த படத்தையும் தயாரிக்க ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் எங்கள் நிறுவனத்துடன் சம்பந்தப்படுத்தி சில வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும் அவை அனைத்தும் உண்மை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அஜித் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது தெரிய வருகிறது. இதுவே வதந்தி என்றால் அஜித்தை சுதா கொங்கரா சந்தித்ததும் வதந்தியாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.
We have not signed any projects for 2020. Saw some fake news making the rounds so just wanted to clarify on behalf of @Ags_production
— Archana Kalpathi (@archanakalpathi) September 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout