ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. டைட்டில் , ஹீரோ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 24வது படத்தில் சதீஷ் நாயகனாக நடிக்க இருக்கிறார். நாயகியாக ரெஜினா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இயக்க உள்ளார்.
இந்த படத்திற்கு ’காஞ்ஜூரிங் கண்ணப்பன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் தற்போது மீண்டும் சதீஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ‘தளபதி 68’ திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
Presenting #AGS24 titled #ConjuringKannappan, a comedy-horror-fantasy multi-starrer flick
— AGS Cinemas (@agscinemas) September 18, 2023
Produced by @Ags_production
Directed by @selvinrajxavier#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi @actorsathish @ReginaCassandra @actornasser… pic.twitter.com/6oilD5lIps
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments