மயானத்திற்கு வழிவிடாமல் விவசாயம்....! அதற்கான போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கரூர் மாவட்டத்தில், நெரூர் தென்பாகம் பகுதிக்கு அருகில் உள்ள ஊர் தான் வேடிச்சிபாளையம். இங்கு பட்டியலின மக்களுக்கு என்று தனியாக மயானம் உள்ளது. ஆனால் மயானத்திற்கு செல்ல விடாமல், அந்த வழியிலே சிலர் விவசாயம் பார்த்து வந்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்புக்காரர்களை கண்டித்து, கடந்த சுதந்திர தினத்தனன்று அப்பகுதி மக்கள் 40 பேர் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட வேலுச்சாமி என்பவர் திடீரென மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் வேலுச்சாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதுமட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின் கீழ், 1 லட்சம் ரூபாய், ஈம சடங்கு நிதியாக இருபத்தி இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய், ஆகியவற்றை பெறுவதற்கான ஆணையை, இறந்தவரின் மனைவி மணிமேகலையிடம் தந்துள்ளார்.
இறந்த வேலுச்சாமிக்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும், சந்தோஷ் ( 19 ), சாரதி(13) என்ற இருமகன்கள் இருந்துள்ளனர். இவர்களின் கல்வி ரீதியான மேற்படிப்பிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர்களிடம் உறுதி தெரிவித்தார் ஆட்சியர் அவர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments