ஆக்சிஜன் சிலிண்டருக்காக போலீசார் காலில் விழுந்து கதறும் நபரின் வீடியோ… உ.பி.யிலா இப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லவே இல்லை. ஆக்சிஜன் இல்லை எனக்கூறும் தனியார் மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத் எச்சரிச்சை விடுத்து இருந்தார். இந்நிலையில் என் தாத்தாவுக்கு ஆக்சிஜன் வேண்டும் என டிவிட்டரில் கேட்ட நபர்மீது அம்மாநில போலீசார் 5 பிரிவுகளில் வழக்குத் தொடுத்து உள்ளனர்.
அதேபோல கடந்த திங்கள் இரவு சத்தார் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரை போலீசார் எடுத்துச் செல்லும்போது என் தயார் இறந்து விடுவார். தயவு செய்து ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள். நான் ஆக்சிஜன் சிலிண்டருக்கு எங்கு போவேன் என பிபிஇ உடையணிந்த ஒரு நபர் அங்கிருக்கும் போலீசார் காலில் விழுந்து கதறும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் உ.பி அரசாங்கத்தின் உண்மை முகம் இதுதான். ஆனால் உண்மையை மறைத்து வருகிறது. அதோடு அச்சுறுத்தவும் செய்கிறது என விமர்சிக்க தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தைக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆக்ரோ எஸ்.பி “ஆக்ராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு 2 நாட்களுக்கு முன்பு இருந்தது. மக்கள் தங்கள் சொந்த சிலிண்டர்களை மருத்துவமனைக்குக் கொடுத்தனர். வீடியோவில் இரண்டுபேர் காலி சிலிண்டர்களைத் தான் எடுத்துச் செல்வதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் அந்த நபர் தன் தாயாருக்கு சிலிண்டர் வேண்டும் எனக் கேட்கிறார். ஆனால் யாரும் ஆக்சிஜன் நிரம்பிய சிலிண்டரை ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்துச் செல்லவில்லை” என்று கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தற்போது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் இந்த வீடியோ உ.பி. அரசாங்கத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகிறது. ஆனால் அம்மாநிலச் சுகாதாரத்தறை அமைச்சகம் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை எனவும் சாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
This is a really heart breaking video.
— Youth Congress (@IYC) April 28, 2021
A man is begging in front of policeman not to take a Oxygen cylinder he has arranged for his mom in Agra, UP.
This is a total inhumane act by the police.
Is this how you should treat your fellow citizens Mr Yogi ? pic.twitter.com/Z4qTqsl5rY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com