விஜய் ஆண்டனி - அருண்விஜய் படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 01 2018]

'மூடர் கூடம்' இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை இன்று மாலை உலக நாயகன் கமல்ஹாசன் அறிவிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்

அதன்படி சற்றுமுன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த படத்திற்கு 'அக்னிச் சிறகுகள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு , ஷாலினி ரெட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். 'மூடர் கூடம்' படத்திற்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'2.0' வில்லனாக கமல் ஏன் நடிக்கவில்லை? ஷங்கர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5.55 மணிக்கு வரும் என்ற செய்தியை பார்த்தோம். அந்த வகையில் இதுகுறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்

மத்திய அமைச்சருடன் பாக்ஸிங் செய்த மேரிகோம்

இந்தியாவில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்றவர் என்பது தெரிந்ததே

பிரதமர் மோடியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நடிகை

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று உலகின் மிக உயரந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை குஜராத்தில் திறந்து வைத்தார்.

சிவகார்த்திகேயனின் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

'சீமராஜா' திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.