குறைகிறது ஆண்களின் திருமண வயது! இனி பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமா?

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது 18 என்பதும், ஆண்களின் திருமண வயது 21 என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இருபாலருக்கும் வாக்களிக்க 18 வயது இருந்தால் போதும் என்ற நிலையில் திருமணத்திற்கு மட்டும் ஆண்களுக்கு ஏன் 21 வயது என்ற கேள்வி ஆண்கள் மத்தியில் எழுந்தன.

இந்த நிலையில் தற்போது ஆண்களுக்கும் திருமண வயதை 18 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கான சட்டதிருத்தம் செய்யப்பட்டவுடன் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ஒரு ஆண் திருமணம் திருமணத்துக்கு தகுதியானவர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குழந்தைகள் திருமணத்தை தடுப்பதற்காக மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் திருமணம் செய்து, இருவரும் திருமண வயது வரை காத்திருந்து, அதன்பின் வாழ, தற்போதைய அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. இனிமேல் அதற்கு இடமில்லை. திருமண வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் செல்லாது என்ற சட்டதிருத்தம் இயற்றப்படவுள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகள் திருமணத்தை செய்து வைப்பவர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 7 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆண்களின் திருமண வயதை 18ஆக குறைத்தால் மட்டும் போதாது, திருமண வயதிற்குள் ஆண்கள் சம்பாதிக்கவும் அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.