வயதில் சிறியவரை காதலிக்க ஆட்சேபனை இல்லை… நெட்டிசன்களை அலறவிட்ட இளம் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா, தன்னைவிட இளம் வயதுடைய நபரை காதலிக்க தனக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிலைக் கேட்ட நெட்டிசன்கள் பலரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் சில விமர்னசங்களும் குவிந்து வருகின்றன.
தெலுங்கில் “கீத கோவிந்தம்“ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. க்யூட்டான சிரிப்பு மற்றும் அழகான பேச்சாலும் ரசிகர்களை ஈர்த்த நடிகை ராஷ்மிகா தற்போது பிசியான நடிகையாக வலம்வருகிறார். தமிழில், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்“ படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இந்தி சினிமாக்களில் தொடர்ந்து நடித்துவரும் ராஷ்மிகா மும்பையிலேயே சொந்த வீடு வாங்கி செட்டில் ஆன தகவல்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகியது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா காதல் மற்றும் ஆண்களிடம் பிடிக்காத சில விஷயங்களைப்பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், காதலுக்கு வயது முக்கியம் இல்லை. என்னைவிட சிறியவரை காதலிப்பதில் பிரச்சனை இல்லை. நாம் காதலிக்கும் நபர் நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை மாற்ற முயற்சி செய்யக்கூடாது.
மேலும் ஆண்கள் சட்டை இல்லாமல் புகைப்படம் வெளியிடுவது தனக்குப் பிடிக்காது என்றும் ஆண்கள் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வது உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன். ஆனால் சட்டையில்லாமல் புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்தை வெளியிடுவது பிடிக்கவில்லை என்றும் நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com