ஆபாச இணையதளம் பார்க்க அடையாள அட்டை! வருகிறது புதிய சட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் ஒருசில ஆபாச இணையதளங்களை அரசு தடை செய்திருந்தாலும் பெரும்பாலான ஆபாச இணையதளங்கள் இண்டர்நெட்டில் செயல்படும் வகையில் உள்ளது பெரும் கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆபாச இணையதளங்களை குழந்தைகள் உள்பட இளையதலைமுறையினர் எளிதில் பயன்படுத்தும் ஆபத்தும் உள்ளது.
இந்த நிலையில் உலகில் முதல்முறையாக ஆபாச இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் அடையாள அட்டை வேண்டும் என்ற சட்டத்தை பிரிட்டன் அரசு கொண்டு வந்துள்ளது. 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமின்றி ஆபாச வலைத்தளங்களுக்குள் செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு உள்பட ஏதாவது ஒரு டிஜிட்டல் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆபாச இணையதளங்களுக்குள் செல்ல முடியும். இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 15 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கையால் பிரிட்டன் நாட்டின் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதே முறை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் ஆபாச இணையதளத்தை பார்க்க ஆதார் அட்டை தேவைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆபாச வலைத்தளங்களை பார்ப்பதை தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கையை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout