'அகத்தியா' திரைப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் தொடங்கப்பட்ட, தென்னிந்திய திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா".
"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதை கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகை படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் தென்னிந்திய பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது - நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது... "திகில்-த்ரில்லர் ஜானரில் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, 'அகத்தியா' மூலம் இந்த அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சி அமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். 'அகத்தியா' கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்து செல்லும்" என்றார்.
2025 ஜனவரி 31 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.
Unravel the Secrets. Restore the Glory. The battle begins this January!✨ #Aghathiyaa – In cinemas Jan 31, 2025!https://t.co/OfY63wSYLn
— Jiiva (@JiivaOfficial) December 24, 2024
A @pavijaypoet Mystery ✨
A @thisisysr Musical 🎵@IshariKGanesh @VelsFilmIntl @WamIndia @aghathiyaa @JiivaOfficial @akarjunofficial… pic.twitter.com/ROjSBvyF9j
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com