அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா வாங்கியது உண்மையா? தியேட்டர் நிர்வாகம் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வட சென்னையில் உள்ள அகஸ்தியா என்ற பழமையான திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கி விட்டதாகவும் அதில் அவர் மல்டிபிளக்ஸ் கட்டப் போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்த விளக்கத்தை அகஸ்தியா தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது
சென்னையின் அடையாளங்களில் ஒன்று அகஸ்தியா திரையரங்கம் என்பதும் கடந்த 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் 1000 பேர் வரை இந்த திரையரங்கில் படம் பார்க்கலாம் என்பதும் இந்த திரையரங்கம் கடும் நெருக்கடியை சந்தித்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் வாங்கி விட்டதாகவும் அந்த இடத்தில் மல்டிபிளக்ஸ் கட்ட இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அகஸ்தியா திரையரங்க நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் அகஸ்தியா திரையரங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் தான் இயங்கி வருவதால் அதை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. எனவே இந்த திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கிவிட்டார் என்ற செய்தியில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout