தேனியில் கழுதைக்கும் நாய்க்கும் நடந்த வினோத திருமணம் – காதலர் தின எதிர்ப்பு

  • IndiaGlitz, [Saturday,February 15 2020]

உலகம் முழுவதும் காதலின் அடையாளமாக பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு பல்வேறு அமைப்பினர் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருவதும் வாடிக்கையாகி இருக்கிறது.

காதலர் தினம் போன்ற கொண்டாட்டங்களை ஊக்கு விப்பதால் சமூகத்தில் பல பிரச்சினைகள் வரும்.  இதுபோன்ற விழாக்களால் ஒழுக்கச் சீர்க்கேடுகளும், பொது இடங்களில் அத்து மீறல்களும் அரங்கேறுகின்றன. காதலர் தினம் என்பது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல என்பதைத் தெரிவிக்கும் விதமாக சில நேரங்களில் வினோத செயல்களில் ஈடுபடுவதும் உண்டு.

தேனியை அடுத்த பொம்மையகவுண்டன் பட்டியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நேற்று கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் நடத்தி வைக்கப் பட்டது. இதில் கழுதைக்கும் - நாய்க்கும் சந்தனம், குங்குமம் போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்தனர். பின்பு கழுதைக்குத் தாலியும் கட்டப்பட்டது.

காதலர் தின எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோஷங்களும் எழுப்பப் பட்டன. கழுதை பகவானே! கழுதை பகவானே! காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு நல்ல புத்தி கொடு  பகவானே என்ற முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.