'பேசறதே வேஸ்ட்டு'.. படிப்படியாக வளரும் மாயா-பூர்ணிமா பகை.. என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்து படிப்படியாக பகை வளர்ந்து வரும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் புல்லிங் குரூப் என்று கூறப்பட்ட மாயா தலைமையிலான குரூப்பில் பூர்ணிமா முக்கிய அங்கத்தினராக இருந்தார் என்பதும் இருவரும் சேர்ந்து பல போட்டியாளர்களின் மனதை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரதீப் வெளியேற இந்த குரூப் தான் காரணம் என்பதும் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஷ்ணு உட்பட பலரை இந்த குரூப் காயப்படுத்தி உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பூமராங் போல தற்போது மாயா மற்றும் பூர்ணிமா இடையே கருத்து மோதல் வெடித்து வருகிறது. ஏற்கனவே நேற்று நடந்த டாஸ்க்கில் கரன்சிகளை பகிர்ந்து கொள்வதில் மாயா மீது கோபமடைந்த பூர்ணிமா, இன்று மாயா மற்றும் ரவீனா டான்ஸ் ஆடியது குறித்த விமர்சனத்தால் இருவருக்கும் இடையே பிரச்சனை வருகிறது.
இந்த டான்ஸ் குறித்து பூர்ணிமா கூறிய போது ரவீனாவை பாராட்டினார். ஆனால் தன்னை பாராட்டவில்லை என்ற காரணத்தினால் மாயா, பூர்ணிமாவுடன் சண்டைக்கு செல்கிறார். ’நான் ஒரு விஷயத்தை நான் பேச வந்தேன் ஆனால் நீங்கள் மாற்றி விட்டீர்கள்’ என்று மாயா கூற ’இதுக்கு மேல் இந்த விஷயத்தை பேசுவது வேஸ்ட்’ என்று பூர்ணிமா கோபமாக கூறுகிறார் மொத்தத்தில் மாயா - பூர்ணிமா இடையே படிப்படியாக பகை வளர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments