மீண்டும் ஒரு மிட்வீக் எலிமினேஷனா? இம்முறை சிக்கும் போட்டியாளர் இவரா?

  • IndiaGlitz, [Thursday,January 11 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் நேற்று திடீரென மிட்வீக் எவிக்சன் நடந்தது என்பதும் அதில் விஜய் வர்மா எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவருமே இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி மீண்டும் ஒரு மிட்வீக் எவிக்சன் நடைபெற இருப்பதாகவும் இதனை அடுத்து நாளை ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை இறுதி போட்டிக்கு விஷ்ணு தகுதி பெற்று விட்டதால் அவர் வெளியேற வாய்ப்பு இல்லை. மேலும் அர்ச்சனா மற்றும் மாயா ஆகிய இருவருக்கும் வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளதாகவும் அதனால் அவர்கள் இருவரும் வெளியேற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்படியானால் மணி, தினேஷ் ஆகிய இருவரில் ஒருவர் தான் நாளை வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க ஆச்சரியங்களும் அதிகரித்து வருவதை அடுத்து கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்பதை பார்க்க பார்வையாளர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.