திரும்பவுமா??? பெய்ஜிங்கில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!!! விமான நிலையம், பள்ளிகள் மூடல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சீனா மீண்டு வந்துவிட்டது. உலகின் மற்ற நாடுகள் எல்லாம் மரணப்பயத்தில் இருக்கும் போது பரவலுக்கு காரணமான சீனா மட்டும் நிம்மதியாக இருக்கிறது, தற்போது பொருளாதார உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது என்கிற ரீதியில் விமர்சனங்கள் கூட வைக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது தலைநகர் பெஸ்ஜிங்கில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் நிலைமையைச் சமாளிக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட நபருக்கு கொரோனா நோய்த்தொற்று புதிதாக ஏற்பட்டு இருப்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்புதிய பாதிப்பு சீனாவில் இரண்டாவது அலையை ஏற்படுத்துமா என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை தலைநகர் பெய்ஜிங்கில் 1200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றன. கடந்த 17 ஆம் தேதி அந்நாட்டின் அரசு ஊடகமான Peoples Daily 1255 விமானங்களை ரத்து செய்துவிட்டதாக செய்தி வெளியிட்டு இருந்தது. மேலும் திறக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. பெய்ஜிங் தலைநகரில் அனைத்து பகுதிகளும் தற்போது முடக்கப்பட்டு வருகின்றன.
நகர எல்லைகள் கடுமையான பாதுகாப்புடன் பயணிகளை அனுமதிப்பதாகவும் மற்ற மாகாணங்களக்க பெய்ஜிங் மக்கள் போகும் போது தனிமைப்படுத்தப் படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. விமானங்களைத் தவிர மற்ற போக்குவரத்துகளும் 70 விழுக்காடு முடக்கப்பட்டு இருக்கிறது. பெய்ஜிங் எல்லைப் பகுதியில் செல்லும் பயணிகளுக்கு கட்டாயம் நியூக்ளிக் அமில சோதனை நடத்தப்படுகிறது. மேலும் தலைநகரில் உள்ள 11 முக்கிய சந்தைகள் மூடப்பட்டுளள்ன. உணவுச் சந்தைகள் கூட பெருமளவு மூடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பெய்ஜிங்கின் நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன், “தலைநகரில் தொற்றுநோய் பரவல் நிலை மிகவும் கடமையாக இருக்கிறது’‘ எனக் கூறியுள்ளார். குழுவாக விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. நெரிசலான இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசங்கள் கட்டாயமாக்கப் பட்டு இருக்கின்றன. பெய்ஜிங் மக்கள் மற்ற மகாணங்களுக்கு சுற்றுலா செல்லவும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தலைநகர் பெய்ஜிங் தற்போது நோய்த்தொற்றுக்கு சாதாமான அபாயப் பகுதியாக கருதப்படுகிறது. காரணம் மிக வேகமாக நோய்த்தொற்று பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. தலைநகரில் உள்ள ஜின்ஃபாடி என்ற உணவுப்பொருள் விற்கும் நிலையத்திற்கு மட்டும் மே 30 ஆம் தேதியில் இருந்து 30 லட்சம் மக்கள் வந்து சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள 8 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. நெருக்கடியான நிலையில் பெய்ஜிங் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments