திரும்பவுமா??? கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மறுபடியும் கொரோனா பாதிப்பு!!!

  • IndiaGlitz, [Friday,April 17 2020]

 

முன்னதாக ஒருவரது உடலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டால் அவருக்கு மீண்டும் கொரோனா வருவதற்கான சாத்தியம் 95 விழுக்காடு இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் இக்கருத்து தற்போது பொய்த்துவிடும் போல இருக்கிறது. தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைபெற்று, பல முறை உடலில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 141 பேருக்கு மீண்டும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக கொரோனா வைரஸ் என்றில்லாம் அனைத்து வைரஸ் கிருமிகளுக்கும், “ஒரு தடவை நோய்த்தொற்றுக்கு ஆளாகி, பிறகு உடல் நலம் பெற்றுவிட்டால் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு” என மருத்துவ உலகம் நம்பிக்கை அளித்துவருகிறது. ஏனெனில் ஏற்கனவே உடலைப் பாதித்த நோய்த்தொற்றை எப்படி எதிர்க்க வேண்டும் என உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் நன்கு அறிந்து வைத்திருக்கும். எனவே மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதை ஒருவரது நோய் எதிர்ப்பு மண்டலம் அவ்வளவு எளிதாக அனுமதிக்காது. கொரோனா வைரஸ் விஷயத்திலும் இதே நிலைமை தொடரும் என நம்பிய மருத்துவ உலகிற்குத் தற்போது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தென்கொரியாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனத்தின் தலைவர் ஜியோங் என் கையோங் “அவர்களுக்கு மறுபடியும் தொற்று ஏற்பட்டிருக்கும் சாத்தியத்தைவிட உடலில் அமைதியாக இருந்த கொரோனா வைரஸ்கள் மறுபடியும் செயல்பட ஆரம்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து ஆய்வுசெய்துவரும் KCDC மருத்துவ விஞ்ஞானிகள் ஒருவரது நோய்எதிர்ப்பு மண்டலம் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்ளவில்லை எனப் பொதுவாக இந்த விஷயத்தில் கருத்துக் கூறமுடியாது. கொரோனா வைரஸை பொறுத்தவரை ஒருவிதமான மறுபிறப்பு அல்லது மீண்டும் செயல்படுத்துதல் என்றே சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலங்கள் இருந்து, அவர்களது செல்களுக்குள் செயலிழந்த நிலையில் இருக்கும் கொரோனா வைரஸ் கிருமிகள் மீண்டும் செயல்படத் தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது என KCDC மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் கொரோனா பரிசோதனைக்காக PCR சோதனை கருவிகள் பயன்படுத்துகின்றன. இக்கருவிகள் 95 விழுக்காடு துல்லியமானது எனக் கருதப்பட்டாலும் சில நேரங்களில் சேகரிக்கப்படும் மாதிரிகள் மற்றும் பரிசோதனை செய்யும் பணியாளர்களின் கவனக் குறைவால் தவறான முடிவுகள் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

சோதனையில் PCR கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக கொரோனா கிருமிகள் இருந்திருக்கக் கூடும் எனவும் ஒரு மருத்துவர் சந்தேகம் தெரிவித்து இருக்கிறார். குறைவான பாதிப்புகளை கொண்ட மாதிரிகளால் சரியான முடிவை தரமுடியாது என KCDC துணை இயக்குநர் குவான் ஜுன்-வூக் தற்போது குறிப்பிட்டுள்ளார். தற்போது தென் கொரியாவின் ஏற்பட்டிருக்கும் இத்தகைய நிகழ்வுகள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கவலை கொள்ள செய்திருக்கிறது. கொரோனா நோய்க்கிருமிகள் பரிசோதனை கருவிகளையும் ஏமாற்றும் வல்லமைக் கொண்டிருப்பதால் பல முறை சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தைப் பல விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

More News

பிரபல நடிகை ஆரம்பித்து வைத்த 'பில்லோ சேலஞ்ச்': வைரலாகும் புகைப்படங்கள்

உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்ட் ஆவது வழக்கமான ஒன்றே. ஐஸ்கட்டி குளியல் சேலஞ்ச் முதல் பல சேலஞ்சுகள் இதுவரை டிரெண்ட் ஆகியுள்ள நிலையில்

அண்டை மாநிலத்தின் வெற்றியும் தமிழகத்தின் சுய விளம்பரமும்: கஸ்தூரி ஆவேச டுவீட்

இந்தியாவில் முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது.

ராகவா லாரன்ஸின் அடுத்த ரூ.25 லட்சம் நிதியுதவி: 

கொரோனா வைரஸ் காரணமாக முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும்

கொரோனா நோய்க்கான எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களுக்கு இயல்பிலேயே இருக்கிறது!!! மூத்த விஞ்ஞானி தகவல்!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கொசுத் தடுப்பு மையத்தின் மூத்த விஞ்ஞானியும் சுகாதாரத்துறை ஆலோசகருமான மாரியப்பன் கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல்

வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி? பிரபல நடிகையின் ரெசிப்பி வீடியோ

கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், பல நடிகைகள் வித்தியாசமான தங்களுடைய அனுபவங்களையும்,