close
Choose your channels

'தளபதி 67' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் ஹீரோ இவர் தான்!

Sunday, October 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன் பின்னர் ’கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ’தளபதி 67’ படத்தை முடித்துவிட்டு ’கேஜிஎப்’ யாஷ் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் பெங்களூரு பிரபலம் ஒருவரின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்றும் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தென்னிந்திய திரை உலகில் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஹிட் படம்ன் உருவாகும் என்பது உறுதியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment