'தளபதி 67' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் ஹீரோ இவர் தான்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன் பின்னர் ’கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ’தளபதி 67’ படத்தை முடித்துவிட்டு ’கேஜிஎப்’ யாஷ் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் பெங்களூரு பிரபலம் ஒருவரின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்றும் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தென்னிந்திய திரை உலகில் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஹிட் படம்ன் உருவாகும் என்பது உறுதியாகிறது.

More News

ஒன்மேன் ஷோவாக பிக்பாஸ்: கமல்ஹாசனே ரசிக்கும் அளவுக்கு ஜிபி முத்துவின் காமெடி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களும்  சீரியசாகவே சென்று கொண்டிருந்த நிலையில் இந்த சீசன் மட்டுமே கலகலப்பாகவும் காமெடியாகவும் உள்ளது என்பதும் அதற்கு முழு காரணம்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் 'பொன்னியின் செல்வன்' ஹீரோ: வேற லெவலில் பிரமாண்டம்!

 பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த திரைப்படத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தனுஷ், விஜய்யை அடுத்து 'காந்தாரா' படத்தை பார்த்து வியந்த அஜித்-விஜய் நாயகி!

கன்னடத்தில் உருவான 'காந்தாரா' என்ற திரைப்படம் கர்நாடகாவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 100

சென்னை அண்ணா சாலையில் 'துணிவு' படப்பிடிப்பு.. அஜித் கலந்து கொண்டாரா?

அஜித் நடித்துவரும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தாக தகவல் வெளியானது.

பிக்பாஸில் இப்படி ஒருவர் இல்லாமலே இருந்திருக்கலாம்.. ஒரே ஒருவரை குறி வைக்கும் சக போட்டியாளர்கள்!

இப்படி ஒரு போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றால் எந்த போட்டியாளரை நீங்கள் குறிப்பிடுவீர்கள் என கமல்ஹாசன் கேட்கும் கேள்வி இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில்