புதிதாக உருவான மஞ்சை பூஞ்சை தொற்று....!அறிகுறிகள் என்ன..? தடுப்பது எப்படி...?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மஞ்சள் பூஞ்சை தொற்று என்ற புதிய நோய் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், காசியாபாத் என்ற நகரில் உள்ள நோயாளி ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், காது மூக்கு தொண்டை பிரிவு நிபுணர் பிரிஜ் பால் தியாகி என்பவரின் தலைமையில் அமைந்த மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளைப்பூஞ்சை தொற்றுக்களை காட்டிலும், இந்நோய் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அது குணமடைய வெகு காலம் ஆகும் என்றளவிற்கு இந்நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
இதற்கு சிகிச்சை எப்படி எடுத்துக் கொள்ளலாம்...?
மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் முக்கிய உடலுறுப்புகளை இது செயலிழக்க செய்துவிடும். மற்ற பூஞ்சை நோய்களுக்கு மருத்துவர்கள் அம்போட்டெரிசின் பி, என்ற மருந்தை பரிந்துரை செய்கிறார்கள். அதைப்போல மஞ்சள் பூஞ்சை தொற்றுக்கும் இதேமருந்து தான் தீர்வாக உள்ளதாக கூறுகிறார்கள்.
மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் என்னென்ன...?
பசியின்மை
திடீர் உடல் எடை இழப்பு
கண்கள் வீக்கமடையும்
சோம்பல்
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
தொற்று ஏற்பட காரணம் என்ன...?
- வீடுகள் மற்றும் நாம் பயன்படுத்தும் இடங்களில் மோசமான சுகாதாரம்.
- கழிவறைகளை சுத்தமாக இல்லாதது.
- உணவுப்பொருட்களில் பூஞ்சை தொற்று இருத்தல்.
- கழிவுகள் தேங்கி இருந்தால் தொற்று விரைவில் ஒட்டிக்கொள்ளும்.
- ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் சூரிய ஒளி படும்படி தரை மற்றும் சுவர்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
- அறைகளில் குப்பைகள் தேங்காமல் காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments