யானை, தமிழ் ராக்கர்ஸ் படங்களை அடுத்து அருண்விஜய்யின் அடுத்த பட ரிலீஸ் தேதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் அருண் விஜய் நடித்த ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடரும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அருண்விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ திரைப்படத்தை ஜிஎனார். குமரவேலன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கன்பவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து கலக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே அருண் விஜய்யின் ஹாட்ரிக் வெற்றி படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Here we are, finally!! #Sinam release date announcement tomorrow @ 5 PM. Stay tuned..@MSPLProductions @gnrkumaravelan #Vijaykumar #PallakLalwani @kaaliactor @gopinath_dop @shabirmusic @madhankarky @silvastunt @DoneChannel1 @Muzik247in @ctcmediaboy pic.twitter.com/qgmmDwBaup
— ArunVijay (@arunvijayno1) August 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments