close
Choose your channels

'சீயான் 60' முடிவுக்கு வந்த அடுத்த நாளே தொடங்கிய 'கோப்ரா' படப்பிடிப்பு!

Sunday, August 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ’சியான் 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் நடந்தது என்பதும் இந்த படத்திற்காக விக்ரம், துருவ் விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவரும் டார்ஜிலிங் சென்றார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘சீயான் 60’ படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘சீயான் 60’படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து அப்படியே கொல்கத்தா சென்ற விக்ரம் அங்கு ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இன்று முதல் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு விக்ரம், கொல்கத்தாவில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் செல்வதாகவும் அங்கு ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சியான் விக்ரம் நடித்த மூன்று படங்கள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதால் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு இருப்பதால் சியான் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment