விஜய் விழியகம், விஜய் பயிலரங்கம்.. அடுத்தது ஒரு மாஸ் திட்டம்.. பொதுமக்கள் ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Friday,September 15 2023]

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விஜய் விழியகம், மற்றும் விஜய் பயிலரங்கம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக ஒரு மாஸ் திட்டம் இருப்பதாகவும் அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் சமூக சேவைகள் மற்றும் மறைந்த தலைவர்களுக்கு மாலை அணிவிக்கும் செயல்களை செய்து வருகிறார்.

ஏற்கனவே விஜய் விழியகம் மூலம் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கண் தானம் செய்துள்ளனர். அதேபோல் விஜய் பயிலரங்கம் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக சமீபத்தில் விஜய் மருத்துவர் அணியின் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் மினி கிளினிக் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் விஜய் மினி கிளினிக் தொடங்கப்பட்டு இலவச மருத்துவம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

ஒரு அரசு செய்ய வேண்டிய பணிகளை விஜய் மக்கள் இயக்கம் செய்வதால் ஒரு மினி அரசாங்கமே விஜய் மக்கள் இயக்கத்தால் நடத்தப்பட்டு வருவதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

More News

விஜய்யை அடுத்து எஸ்.ஏ.சியை சந்தித்த இன்னொரு பிரபலம்.. முடிவுக்கு வந்ததா பனிப்போர்?

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை அவருடைய மகனும் நடிகருமான தளபதி விஜய் சமீபத்தில் சந்தித்த நிலையில் தற்போது விஜய்க்கு நெருக்கமான, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவர்களும்

சிறகடிக்க ஆசை: பணத்தை திருடி வசமாக மாட்டி கொண்ட மனோஜ்.. ரோஹினி எடுக்கும் முடிவு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் குறுகிய காலத்தில் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுவிட்டது என்பதும் ஒவ்வொரு நாளும் இந்த சீரியலை பார்க்க பார்வையாளர்கள்

'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன் கேரக்டருக்கு 3 பேர் பரிசீலனை.. யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு..!

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ஜி மாரிமுத்து திடீரென காலமாகிவிட்ட நிலையில் அவரது கேரக்டரில் நடிப்பது யார் என்ற குழப்பம்

லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்யும் தமிழ் நடிகை.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்..!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  

சோனியா அகர்வாலை மறக்காமல் டேக் செய்த செல்வராகவன்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை டேக் செய்திருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.