உலகக்கோப்பை ஜெயித்தவுடன் 3 ஜாம்பவான்கள் ஓய்வு அறிவிப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி..!
- IndiaGlitz, [Sunday,June 30 2024]
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் 3 ஜாம்பவான் வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதை அடுத்த கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நடந்த நிலையில் அதில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் விராட் கோஹ்லியின் 76 ரன்கள், ஹர்திக் பாண்ட்யாவின் மூன்று அருமையான விக்கெட் மற்றும் சூரியகுமார் யாதவ் அசத்தலான கேட்ச் ஆகியவை இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணங்கள் ஆகும்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடம் தொலைபேசியில் பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற நிலையில் மூன்று ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் ஜடேஜா ஆகிய மூவருமே தங்கள் ஓய்வை அடுத்தடுத்து அறிவித்துள்ளனர். டி20 கிரிக்கெட் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கண்ட மூவரும் அறிவித்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலையில் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா தங்களது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் சற்றுமுன் ஜடேஜாவும் தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறிய நினைவில் ஓய்வு பெறுகிறேன், இருப்பினும் டெஸ்ட் மட்டும் ஒருநாள் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன், நீங்கள் அளித்த வந்த ஆதரவுக்கு தனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.