விஜய்யை அடுத்து விக்ரம் மீது புகார் அளித்த நபர்.. ஐபிசி 1860 கீழ் 326ல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'கொட்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியான தினத்தில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த நபர் தற்போது விக்ரம் மீது புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஆர் கே செல்வம் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:
இணையதளத்தில் இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டினால் அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சமூக வலைதளங்களில் கத்தியை வைத்து கொண்டு ரீல்ஸ் போட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.
அதேபோல், கத்தியை வைத்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் பகிர்ந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தற்போது வீரதீர சூரன் படத்தின் போஸ்டரில் கத்தியை இரண்டு கையில் வைத்து கொண்டும் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்லும் வகையில் விக்ரம் செயல்பட்டு வருகிறார். இந்திய தண்டனைச் சட்டம் 1860 கீழ் 326 படி இது தவறு. தகவல் தொழில்நுட்ப தடுப்புச் சட்டம் 2000 கீழ் 66(a), சமூக வலைதளங்களில் அதை கண்டு இளைஞர்கள் மத்தியில் வன்மத்தை தூண்டும் வகையில் உள்ளதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தவறானது.
எனவே விக்ரம், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்பம் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments