ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்றொரு பிரபல நடிகரின் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதும் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் பல திரைப்படங்ள் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகி வருகின்றன. குறிப்பாக விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது நடிகர் ஆதி நடித்த ’கிளாப்’ என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில், பிரத்வி ஆதித்யா இயக்கத்தில் உருவான ’கிளாப்’ திரைப்படம் விரைவில் சோனிலைவ் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் ரிலீஸாகவிருக்கும் ’கிளாப்’ திரைப்படம் தடகள வீரர் ஒருவர் விளையாட்டு துறையில் முன்னேற முடியாமல் சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல் ஆகியவை குறித்த கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Will Vishnu’s courage and conviction be enough for him to achieve his dream? #CLAP , an inspiring sports drama, streaming soon in Telugu & Tamil, on #SonyLIV@prithivifilmist @AadhiOfficial @aakanksha_s30 @KurupKrisha @actorbrahmaji #nassar @prakashraaj pic.twitter.com/TepK0by9U4
— SonyLIV (@SonyLIV) February 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments