விஜய்சேதுபதியை அடுத்து சாய்பல்லவி.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து ’புஷ்பா 2’ படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல் தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் சாய்பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர் நடிக்க இருக்கும் பழங்குடியின் பெண் கேரக்டர் தான் படத்தின் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இதுகுறித்து ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். ‘புஷ்பா 2’ படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை என்றும் அது தவறான தகவல் என்றும் அவர் கூறி உள்ளார். இதனை அடுத்து விஜய் சேதுபதியை அடுத்து சாய்பல்லவியும் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் ‘புஷ்பா’ முதல் பாகத்தில் நடித்த பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர்கள் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout