விஜய்யின் செல்பியை அடுத்து டுவிட்டரில் சாதனை செய்த சூர்யா!
- IndiaGlitz, [Tuesday,December 08 2020]
’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் தளபதி விஜய் எடுத்த செல்பி புகைப்படம் 2020ஆம் ஆண்டின் மிக அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தளபதி விஜய்யின் இந்த செல்பி செய்த சாதனையை அடுத்து இந்த ஆண்டு டுவிட்டரில் வேறென்ன சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
திரைப்படங்களை பொறுத்தவரை மூன்று திரைப்படங்களின் ஹேஷ்டேக் மிக அதிகமாக டுவீட் செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த ‘தில் பச்சாரா’ என்ற திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது
இதனையடுத்து இரண்டாவது இடத்தில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தின் ஹேஷ்டேக்கும், மூன்றாவது இடத்தில் மகேஷ்பாபுவின் ’சரிலேரு நீகேவரு’ படத்தின் ஹேஷ்டேக்கும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் விளையாட்டு துறையை பொறுத்த வரையில் இந்த ஆண்டு அதிகமாக டுவிட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் ‘ஐபிஎல் 2020’ என்பது தான். அதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸின் தாரக மந்திரமான ’விசில் போடு’ என்ற ஹேஷ்டேக் அதிக அளவில் டுவீட் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக ’டீம் இந்தியா’ என்ற ஹேஷ்டேக்கில் அதிக டுவிட்டுக்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.