விஜய்க்கு நெய்வேலி, அஜித்துக்கு திருச்சி... கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Thursday,July 28 2022]

'மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் தளபதி விஜய்யை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில் அதேபோல் திருச்சியில் அஜித்தை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி கேகே நகரில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜீத் திருச்சிக்கு வருகை தந்தார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொள்கிறார் என்ற தகவல் கேட்டதும் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அஜித் ரசிகர்கள் போட்டி நடைபெறும் இடத்தில் குவிந்தனர். அஜித்தை நேரில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில் கண்ணாடி அறையிலிருந்து அஜித் ரசிகர்களுக்கு கையசைத்து காட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து அஜீத்தை பார்ப்பதற்காக கூட்டம் அதிகமான நிலையில் நேற்று மாலை அஜித், துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறும் கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். இது குறித்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் அவர் ஒரு பஸ் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்த புகைப்படம் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை செய்தது. அதேபோல் தற்போது அஜீத் மொட்டை மாடியில் நின்று கை அசைத்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.