தமிழில் முதலிடம் 'லியோ', இரண்டாமிடம் 'சூர்யா 42': எதில் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் அதிக விலைக்கு டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்ட திரைப்படம் விஜய்யின் ’லியோ’ திரைப்படம் முதல் இடத்திலும் சூர்யாவின் ’சூர்யா 42’ திரைப்படம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் திரைப்படங்கள் தற்போது திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியில் வெளியாவதால் ஓடிடி உரிமைகளும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி வருகிறது. குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தயாரிக்கும் போது டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் விற்பனையாகி வருகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே விஜய்யின் ’லியோ’ திரைப் படத்தின் சாட்டிலைட் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக கூறப்படும் நிலையில் தற்போது ’சூர்யா 42’ படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பல கோடிக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கு ரிலீசுக்கு ஒரு மாதம் கழித்து ‘சூர்யா 42’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் உள்பட 13 மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments