விஜய், விக்ரம் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Monday,April 15 2019]

தளபதி விஜய் நடித்த 'புலி' மற்றும் விக்ரம் நடித்த 'சாமி 2' ஆகிய படங்களை தயாரித்த ஷிபு தமீன் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சமீபத்தில் விஜய்சேதுபதியை சந்தித்த ஷிபுதமீன், அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இருவரும் இணையும் படம் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது



விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள 'மாமனிதன்', 'சிந்துபாத்' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஷிபுதமீன் தயாரிப்பிலும் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது