விஜய், அஜித்தை அடுத்து இன்னொரு மாஸ் பிரபலத்துடன் இணையும் த்ரிஷா ..!

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகி ஆக நடித்து வரும் த்ரிஷா சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக தளபதி விஜய் உடன் த்ரிஷா நடித்திருக்கும் ‘லியோ’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், இந்த படம் விஜய், த்ரிஷாவுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா தான் நாயகி என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 50 வயதை கடந்த பிறகு ஒரு குழந்தைக்கு ஹீரோ தந்தையாகும் நிலையில் அவரது மகனும் தந்தை ஆகிறார் என்றும் இதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் மோகன்லால், பிருத்விராஜ் தந்தை மகனாக நடித்த நிலையில் சிரஞ்சீவி தந்தை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது மனைவியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. மகனாக நடிக்கும் நடிகரின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ’ஸ்டாலின்’ என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருந்த நிலையில் தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர் சிரஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை எமி ஜாக்சனின் காதலர், இவ்வளவு பெரிய நடிகரா? அதிகம் வைரலாகும் தகவல்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை எமி ஜாக்சன் சமீபத்தில் தனது காதலரான ஹாலிவுட் நடிகர்

அதுக்குள்ள காலேஜ் போறியா.. 'மாஸ்டர்' குழந்தை நட்சத்திரத்தை பார்த்து கேட்ட கேள்வி..!

கடந்த 2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக 'உண்டியல்' என்ற கேரக்டரில் நடித்திருந்த சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் தற்போது கல்லூரிக்கு செல்வதாக தெரிவித்த

'மாமன்னன்' முதல் நாள் வசூல் இவ்வளவா? ஹாட்ரிக் வெற்றி பெற்ற மாரி செல்வராஜ்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்

உங்களுக்கு வயசு ஆகுமா? ஆகாதா? மேக்கப் இல்லாத நதியா போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை நதியா நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நிலையில் மேக்கப் இல்லாமல் சிவப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை

அந்த நடிகை கிட்ட பேசணும்.. மஞ்சுவாரியரிடம் கோரிக்கை வைத்த அஜித்..!

13 வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நடித்த நடிகை உடன் தான் பேச வேண்டும் என்று மஞ்சு வாரியரிடம் 'துணிவு' படப்பிடிப்பின் போது அஜித் கேட்டதாக பிரபல நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.