close
Choose your channels

விஜய், அஜித்தை அடுத்து இன்னொரு மாஸ் பிரபலத்துடன் இணையும் த்ரிஷா ..!

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகி ஆக நடித்து வரும் த்ரிஷா சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக தளபதி விஜய் உடன் த்ரிஷா நடித்திருக்கும் ‘லியோ’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், இந்த படம் விஜய், த்ரிஷாவுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா தான் நாயகி என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 50 வயதை கடந்த பிறகு ஒரு குழந்தைக்கு ஹீரோ தந்தையாகும் நிலையில் அவரது மகனும் தந்தை ஆகிறார் என்றும் இதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் மோகன்லால், பிருத்விராஜ் தந்தை மகனாக நடித்த நிலையில் சிரஞ்சீவி தந்தை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது மனைவியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. மகனாக நடிக்கும் நடிகரின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ’ஸ்டாலின்’ என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருந்த நிலையில் தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர் சிரஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment